இனி பயோமெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல்.! தமிழக அரசு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு குடோனில் 7000 டன் நெல் மாயமாகி உள்ளதாக நாளேடுகளில் செய்தி வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நெல் குடோனுக்கு சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் நெல் மூட்டைகள் ஏதும் மாயமாகவில்லை என விளக்கம் அளித்திருந்தார். இளம் தமிழகம் முழுவதும் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பணம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவில் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

பயோமெட்ரிக் நெல் கொள்முதல் முறையின் மூலம் விவசாயிகளுக்கு உடனே பணம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வழங்கும் விவசாயிகளிடம் பணம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தமிழக அரசு எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt announced paddy procurements through only biometric system


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->