48 மணி நேரம் தான் கெடு.! வடக்கு பருவமழை பீதியால் தமிழக அரசு திடீர் ஆலோசனை!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் 48 மணி நேரத்தில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்-23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனைத்தொடர்ந்து தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நிர்வாகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக குடிநீர், சாலை வசதி, பேரிடர் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களின் பாதுகாப்பு, மருத்துவ சேவைகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை குறித்து முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். 

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியில் கால்வாய் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt emergency consultant meeting for Northeast Monsoon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->