தென் மாவட்டங்களே உஷார்.!! தமிழக அரசின் முக்கிய அறிவுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரவாதம் அடைந்து மத்திய அரபிக்கடல் பகுதியில் தீவிர ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 2-ம் தேதி வரை நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குமரி கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் 7000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்புக்காக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tngovt give weather warring to south districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->