ரேஷன் கடைகளில் மே-31க்குள் வரப்போகும் பெரிய மாற்றம்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 683 நியாய விலை கடைகளில் வரைவு எதிர்வினை (QR code) குறியீடு மூலம் ரொக்கமற்ற பண பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனிலையில் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஏதுவாக கோயம்புத்தூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை* மதுரை, சென்னை, வேலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் இன்னும் ஒரு வாரத்தில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மண்டலங்களிலும் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் Paytm, Google Pay, Phone Pe போன்ற UPI வசதிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது குறித்து நியாய விலை கடைகளை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தலைகளை வழங்கி மண்டலங்களில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் 31.05.2023-க்குள் paytm, Google pay, phone pe போன்ற UPI வசதி மூலம் பண பரிமாற்றம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதை உறுதி செய்து நிறைவடைந்தவற்றை கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இதுகுறித்து தினசரி முன்னேற்ற அறிக்கையினை கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் சங்கர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt instruct for UPI Cash Transactions in Ration Shops


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->