திமுகவின் ஆட்சி எப்படி? தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்? கருது கணிப்பு நடத்தும் தமிழக அரசு! - Seithipunal
Seithipunal



செந்தில் பாலாஜி கைது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய தமிழக அரசு முடிவு செய்து உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

234 தொகுதியிலும் ரகசியமாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, மாவட்டங்களில் உள்ள உளவுத்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி உள்ளது? திமுக அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது? மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? உள்ளிட்ட கேள்விகளையும் மக்களிடம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியான அந்த பரபரப்பு தகவலின் படி, தமிழக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் தமிழக மக்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும், தமிழக மக்கள் தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியில் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதற்கு ஆளும் திமுக தலைமையிலான தமிழக அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்து, செந்தில் பாலாஜி பக்கம் முழுவதுமாக துணை நின்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதனை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? செந்தில் பாலாஜியின் கைது மத்திய அரசின் தவறான போக்கு என்பதை மக்கள் உணர்ந்து உள்ளார்களா? பாஜக அல்லாத மாநில அரசுகளின் மீது மத்திய பாஜக அரசு அராஜக போக்கை நடத்தி வருவதை தமிழக மக்கள் உணர்ந்து உள்ளார்களா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, மக்களின் கருத்து என்ன என்பதை பதிவு செய்ய உளவுத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 150 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி, அவர்களின் விவரங்களையும் சேகரித்து ஆவணப்படுத்தி, அனைத்து தரவுகளையும் ஒரு வாரத்திற்குள் அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.

குறிப்பு : இது நூறு சதவீதம் உறுதியான செய்தி கிடையாது, முழுக்க முழுக்க தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt polling fot tn people opinion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->