டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் | அமைச்சர் தியாகராஜன் பரபரப்பு விளக்கம்! ஒரு கோடி காகிதம், மரம் அழிப்பு தற்காலிக பணி!
TNPSC issue Minister PTR Explain in Assembly
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் அமைச்சர் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற 700 க்கும் மேற்பட்டோர் நில அளவர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் அதே பயிற்சி முகத்தை சேர்ந்த 2000 மேற்பட்டோர் இந்த குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தவுடன், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக, சட்டப்பேரவையில் கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் குறித்து பதில் அளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இந்த முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில் இதே போல் சம்பவம் வேறு எங்கேயும் எங்கேயும் நடந்து உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
தேர்வு மையங்கள் தேர்வு மையங்களின் எண்ணிக்கை குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதிகாரிகளின் தரப்பில் இருந்து விளக்கம் வந்தவுடன், நான் இது குறித்து தெரிவிப்பேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தியாகராஜன், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஏழாயிரம் பேரை தேர்ந்தெடுப்பதற்காக 24 லட்சம் பேர் தேர்வு எழுதும் முறை சரியாக தெரியவில்லை.
மேலும் தேர்வர்களுக்கு சுமார் ஒரு கோடி காகிதங்களை அச்சிட வேண்டி உள்ளது. அதற்காக எத்தனை மரங்களை அழிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே அவுட்சோர்சிங் முறையில் ஆட்சேர்ப்பு பணி, தற்காலிக ஊழியர்களை நியமிப்பது குறித்து அதனை நியப்படுத்தி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.
English Summary
TNPSC issue Minister PTR Explain in Assembly