பரபரப்புக்கு மத்தியில் விசாரணைக்கு வரும் கோடநாடு கொலை வழக்கு - நடக்கப்போவது என்ன?
today hearing of kodanadu murder case
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
இதற்கிடையே, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தன்னை தொடர்பு படுத்தி வீடியோ வெளியிட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி, "ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக்கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சாட்சிகளை பதிவு செய்வதற்காக வழக்கை மாற்று நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டிருந்தது. ஆனால், இபிஎஸ் உயர்நீதிமன்றத்தின் வளாகத்திலேயே இருக்க கூடிய மாற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலாது எனவும், தனது வீட்டிலேயே சாட்சியை பதிவு செய்ய வழக்கறிஞரை ஆணையராக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, நேரில் ஆஜராகி எடப்பாடி பழனிசாமி சாட்சியம் அளிக்க விலக்கு அளித்ததோடு, அந்த நடைமுறையை அவருடைய வீட்டிலேயே மேற்கொள்வதற்காக எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டிருந்தார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலன் எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியப் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, எடப்பாடி பழனிசாமியிடம் பெறப்பட்ட சாட்சியப் பதிவை, வழக்கறிஞர் அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில், கோடநாடு வழக்கு தொடர்பாக 8 ஆயிரம் பக்க அறிக்கை நேற்று மாலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
English Summary
today hearing of kodanadu murder case