டாஸ்மாக் விவகாரம் அமலாக்க துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை தமிழக அரசு விளக்கம்.!!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம், மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர் அந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை அமலாக்கத்துறை வெளியிட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மணக்க தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனதில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கை எடுக்காமல் துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெற்ற அமலாபத்துறையின் சோதனைகள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது சட்டவிரோதம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்க துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று வாதிடப்பட்டது.

 தொடர்ந்து டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today hearing tasmac issue case in chennai high court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->