மீன்வளத்தை அதிகரிக்கும் வகையில் கடலில் இறால் குஞ்சுகள் விடுவிப்பு.!
today prawn juveniles released in sea for fishery
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மையத்தின் மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடலில் மீன் வளத்தை அதிகரிப்பதற்காக மீன் குஞ்சுகள் மற்றும் பச்சை வரி இறால்களை வளர்த்து கடலில் விடும் பணி நடைபெறுகிறது.
அந்தவகையில், இன்று 3.1 மில்லியன் பச்சை வரி இறால்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விடப்பட்டன. பெரிய கேன்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இறால் குஞ்சுகள், படகுகள் மூலம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.
அதனை மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையத்தின் தலைவர் தமிழ்மணி தலைமையிலான அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மண்டபம் பகுதி மீனவர் சங்க தலைவர்கள் உள்ளிட்டோர் கடலில் விட்டனர்.
இதுகுறித்து மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, "கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 36.54 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் விடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கை மீன்வளத்தை அதிகரிக்கும் என்பதால், ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
English Summary
today prawn juveniles released in sea for fishery