தமிழகத்தில் இன்று இந்த இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
Today school leave for urban local election area
சென்னை மாநகராட்சியின் வார்டு 51க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 1,174 மற்றும் வார்டு 179க்கு உட்பட்ட 5,059-க்கும் இன்று மறுவாக்குபதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள இரண்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளதாவது,
சென்னை மாநகராட்சியின் வார்டு 51க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 1,174 மற்றும் வார்டு 179க்கு உட்பட்ட 5,059-க்கும் இன்றைய தினம் மறுவாக்குபதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்த வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை உருது பள்ளி மற்றும் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Today school leave for urban local election area