கொட்டும் மழையிலும் நடைபெற்ற சுவாமிமலை தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.!
today swamimalai chariat function for karthikai deepam
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 8 நாட்கள், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இன்று 13-ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகையை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் திருவிழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு இன்று தேரோட்ட நிகழ்ச்சிக்காக தயார் நிலையில் இருந்தது. ஆனால், கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக சுவாமிமலை தேர் முழுவதும் நனைந்து விட்டதைத் தொடர்ந்து சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கார்த்திகை தேரோட்டம் நடத்துவதா இல்லையா என்று அதிகாரிகள் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் 9.15 மணிக்கு தேரோட்டம் நடை பெற்றது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
English Summary
today swamimalai chariat function for karthikai deepam