சென்னையில் நாளை பள்ளிகள் இயங்குமா? - வெளியான முக்கிய அறிவிப்பு.!
tomorrow all schools working day in chennai
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இதனால், சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் நாளை அரசு, தனியார் உள்பட அனைத்துக் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளதாவது:-
" சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை (மார்ச் 22) அன்று பணி நாளாக செயல்படவும் மற்றும் வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணைப்படி செயல்படும்" என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tomorrow all schools working day in chennai