நாளை கன்னியாகுமரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை.. காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி நாளை கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியின் கடல் பகுதியில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து பார்வையிட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தருகிறார். அதன்படி நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் குடியரசுத் தலைவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.

அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு செல்லும் அவர் தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். மேலும், திருவள்ளுவர் சிலை, பாரதமாதா கோயிலையும் பார்வையிடுகிறார்.

அதன் பின்னர் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்பும் அவர் நாளை மாலை ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்படுகிறார் ‌

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக நாளை கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow Picnicers not allowed in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->