பொங்கல் பண்டிகை - ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வெளியூரில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வருவதற்காக ரயில், பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்வார்கள். 

அப்போது, பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில் டிக்கெட் முன்பதிவு முன்பே தொடங்கும். இதன் மூலம்  பயணிகள் தங்களது பயணத்தை சுமூகமாக மேற்கொள்ள முடியும்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல் பண்டிகை, 15-ந்தேதி மாட்டுப் பொங்கல், 16-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்ய விரும்புவோர் நாளையும், ஜனவரி 11-ந் தேதிக்கு பயணம் செய்ய விரும்புவோர் 13-ந்தேதியிலும், ஜனவரி 12-ந்தேதிக்கு பயணம் செய்ய விரும்புவோர் 14-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். 

ஜனவரி 13-ந்தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ந்தேதி முன்பதிவு செய்யலாம். பயணிகள் இந்த டிக்கெட்டை ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train ticket booking start tomarrow for pongal holiday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->