2 நாட்களுக்கு ரயில்கள் ரத்து!...ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம் சாவடிபாளையம் ரெயில்வே யார்டு அருகே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக  திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் 16611 என்ற எண் கொண்ட  பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ரெயில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதன் காரணமாக  திருச்செந்தூர்-நெல்லை இடையே தினமும் இயக்கப்படும் பயணிகள் ரெயில் இன்று முதல் வரும் 8-ம் தேதி [வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை] வரை 5 நாட்கள் இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி மண்டலத்தில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 6, 8, 10 ஆகிய தேதிகளில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு இரவு 8.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trains canceled for 2 days railway administration action announcement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->