பெற்றோர்களே உஷார்.! தாயின் அலட்சியத்தால் பலியான ஒரு வயது ஆண் குழந்தை.! - Seithipunal
Seithipunal


மண்ணெண்ணையை எடுத்து குடித்து உயிரிழந்த ஒரு வயது குழந்தையால் சோகம் ஏற்பட்டுள்ளது. 

திருச்சி அருகே உள்ள சாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த வனிதா மற்றும் பெரியசாமி என்ற தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. வனிதா நேற்று முன்தினம் தன்னுடைய குழந்தையுடன் துறையூர் பகுதிக்கு அருகில் உள்ள தவிட்டுப் பட்டியில் அமைந்துள்ள தன்னுடைய தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.

அந்த வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை பாட்டிலுடன் எடுத்து குழந்தை குடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதை பார்த்து பதறிப்போன வனிதா உடனே குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தார்.

அங்கே குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறது. இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது இது போன்ற ஆபத்தான பொருட்களை அலட்சியமாக கையாளக் கூடாது என்று போலீசார் மற்றவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். எனவே பெற்றோர்கள் கவனமாக இருக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Baby died For Drinking Kerosene oil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->