திருச்சி 3 பேர் உயிரிழப்புக்கு கழிவுநீர் காரணமல்ல! சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு விளக்கம்! - Seithipunal
Seithipunal


திருச்சி மாநகராட்சி உறையூரில், மாநகராட்சி சார்பாக விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், நான்கு வயது பெண் குழந்தை உட்பட மூன்று உயிர்கள் பலியானதாக செய்தி வெளியானது.

கடந்த சில நாட்களாகவே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகாரளித்த நிலையில், மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழக சட்டப்பேரவையில், உறையூர் பகுதியில் மூவர் உயிரிழந்தது தொடர்பான விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை முன்வைத்தார்.  

இதற்கு பதிலளித்துத் தமிழ்நாடு நகராட்சித் துறை அமைச்சர் கே.நேறு, "கழிவு நீர் குடிநீரில் கலந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது" என்று தெளிவாகக் கூறினார். உறையூர் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட மோர், குளிர்பானங்களால் ஏற்படுத்தப்பட்ட பாக்டீரியா தொற்றே உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பவம் தொடர்பாக மருத்துவ இறப்பு சான்றிதழ்களில் கழிவு நீர் காரணமாக உயிரிழந்ததாக எந்தச் சுட்டீதும் இல்லை என்றும், தற்போதைய நிலவரத்தில் அந்த வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார். விசாரணை நடைபெற்று வருவதுடன், சம்பந்தப்பட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதையும் அவர் அறிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

trichy uraiyur people death case minister statement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->