#திருச்செந்தூர்: பக்தர்களுக்கு தங்க அனுமதி இல்லை.! கலெக்டர் அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


இன்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆபீஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

வரும் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற உள்ளது. எனவே திருவிழாவிற்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிவறை மற்றும் தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். 

இந்த கோவில் கந்த சஷ்டி திருவிழாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர் குடி நீர் வீதம் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. 

அத்துடன் 30ஆம் தேதி சூரசம்ஹாரத்தை காண வரும் மக்களுக்கு கூடுதலாக 350 அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறார்கள். சிறப்பு ரயில்களும் இயக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இதில் ஒரே நேரத்தில் அதிகப்படியான பக்தர்கள் கூடுவதால் செல்போன் உள்ளிட்டவற்றிற்கு தற்காலிக கோபுரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tuticorin collector order thiruchendhur murugan temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->