மனைவிக்கு பூ போட்டு பூஜை செய்யும் கணவர்.! காரணம் கேட்டால் நெகிழ்ச்சி.!
tuticorin old men pooja to his dead wife
தூத்துக்குடி அருகே இருக்கும் முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் மாடசாமி என்ற 79 வயது முதியவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு வள்ளியம்மாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிர் இழந்து இருக்கின்றார்.
எனவே, மனைவியை பிரிந்த மாடசாமி மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார். அதன் பின்னர், தனது மனைவிக்கு சிலை அமைத்து வணங்க முடிவு செய்துள்ளார். அதன்படி வீட்டின் முன்பு கடந்த 2017-ம் ஆண்டு தன்னுடைய மனைவிக்கு ரூ.8 லட்சம் செலவில் கற்சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அதன் அருகில் தன்னுடைய சிலையையும் நிறுவி இருக்கின்றார். அன்றாடம் தன்னுடைய மனைவியின் சிலைக்கு பூ போட்டு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றார்.
English Summary
tuticorin old men pooja to his dead wife