த.வெ.க மாநாடு நடக்குமா?! காவல்துறை அனுமதியில் சிக்கல்.. கடைசி நேரத்தில் திருப்பம்?! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் 23ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த வாரம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்து கொடியை நடிகர் விஜய் ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கட்சியின் கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகளையும், பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கி வருகின்றனர். 

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கட்சியின் முதல் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முன் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் ஆட்சியர் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மனு அளித்து இருந்தார்.

விக்கிரவாண்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தில் தவெக மாநாடு நடைபெற அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டு உள்ளது. 

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடத்த 85 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், மேலும் மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக சுமார் 70 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளதாகவும் தெரிய வருகிறது. 

தொடர்ந்து நேற்று, தமிழக வெற்றிக் கழகம் மாநாடுக்காக குறிப்பிட்ட இடத்தில் காவல்துறை அதிகாரிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேற்று ஆய்வு செய்து ஆய்வு செய்திருந்த நிலையில், இந்த இடத்தில் மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay Maanadu Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->