அரசு விடுதிக்குள் மதுபோதையில் சிறுவர்கள் ரகளை - தூத்துக்குடியில் பரபரப்பு.!
two boys arrested for entered womens hostel in thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை- கோவில்பட்டி சாலையில் குமாரபுரம் ஊருக்கு அருகே அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் சில பள்ளி மாணவிகள் தங்களது ஊர்களுக்கு சென்று விட்டனர். அதனால், விடுதியில் தற்போது 35 மாணவிகள் மட்டுமே தங்கி உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கழுகுமலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் மதுபோதையில் மாணவியர் விடுதிக்குள் அத்துமீறி புகுந்தனர்.
மேலும், அங்கிருந்த மாணவிகளிடம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கத்திக் கூச்சலிட்டனர். உடனே 2 சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து விடுதி பராமரிப்பாளர் போலீசால் புகார் அளித்தார்.
அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், 2 சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two boys arrested for entered womens hostel in thoothukudi