நொறுக்கு தீனி வாங்கிக் கொடுத்து.... சிறுமியர்களை வன்கொடுமை செய்த இருவர் கைது!!!
Two members arrested for abusing girls by giving them junk food
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 10 வயதுள்ள ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. இந்த மாணவி பள்ளியில் 2 நாட்களாகச் சோர்வாக இருந்துள்ளதை ஆசிரியர் கண்காணித்துள்ளார். பின்பு மாணவியிடம் விசாரித்த ஆசிரியை, மாணவி கூறியதைக் கேட்டு அதிர்ந்து போனார். மாணவி, தன்னிடம் இரண்டு பேர் தவறான முறையில் நடந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். சற்றும் தாமதிக்காமல் பெற்றோருக்கு இத்தகவலை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை:
மேலும் பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து விசாரித்த போது, சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இதுகுறித்துச் சிறுமியின் பெற்றோர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசாரிடம் நேற்று புகார் அளித்துள்ளனர். போலீசார் சிறுமியிடம் விசாரித்த போது, 35 வயதான ராஜேஷ் மற்றும் 40 வயதான முகிலரசன் ஆகியோர் சிறுமிக்கு தொல்லை அளித்தது தெரியவந்துள்ளது. அவர்களைச் சற்றும் யோசிக்காமல் போலீசார் கைது செய்தனர்.
நொறுக்கு தீனி :
மேலும் மேற்கட்ட விசாரணையில் முகிலரசன்,ராஜேஷ் இருவரும் இணைந்து அப்பகுதியில் உள்ள சிறுவர்கள், சிறுமியர்களுக்கு நொறுக்கு தீனி வாங்கிக் கொடுத்து, இதுபோன்ற காரியங்களைச் செய்துள்ளனர். மேலும் பெண்களைத் தவறான கோணத்தில் புகைப்படம் எடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Two members arrested for abusing girls by giving them junk food