இருவர் சஸ்பெண்ட்!!! தர்மபுரியில் யானை வேட்டையில் வனத்துறையினர்....! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம் பொன்னாகரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏமனூர் அருகே சிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த மார்ச் 1 ல், காட்டு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக பொன்னாகரம் வனத்துறையினருக்குத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த வனத்துறையினர் யானைமுகம் சிதைக்கப்பட்டு, தும்பிக்கைத் தனியாக கிடந்ததை உறுதி செய்தனர்.

தற்காலிகப் பணியிடை நீக்கம்:

மேலும் அடையாளம் தெரியாதவாறு ஆண் யானையை உடல் முழுவதும் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனால் காட்டு யானைத் தந்தத்திற்காக கொன்று இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவத்தைத் தடுக்க தவறியதாகக் கூறி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், நெருப்பூர் பிரிவு வனவர் சக்திவேல் மற்றும் ஏமனூர் பீட் வனக் காப்பாளர் தாமோதரன் இருவரையும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

வனத்துறையினர்:

இதைத்தொடர்ந்து யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு யானையைக் கொன்றவர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இது போன்று தந்தத்திற்காக யானையைக் கொள்வது குற்றம் எனத் தெரிந்தும் யானைகளைக் கொல்ல முயல்பவர்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்கத் தீவிரமான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two people suspended Forest department personnel involved in elephant hunting in Dharmapuri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->