தீடிர் சோதனை! சிக்கிய 30 லிட்டர் கள்ளச்சாராயம்! வசமாக சிக்கிய 2 பெரும் தலைகள்!
Two people were arrested for brewing counterfeit liquor near Andipatti
தேனி : ஆண்டிப்பட்டி அருகே ஊரல் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் அதிகம் மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போலீசார் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வந்துள்ளது. ஆண்டிபட்டி அடுத்துள்ள மெய்கிளார்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே பழனிகுமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து புகார் அளித்துள்ளார்.
தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டு இருந்த அதே ஊரை சேர்ந்த ராமகிருஷ்ணன், கிழக்கு தெருவை சேர்ந்த பொன்இருளன் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 30 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சாராய ஊரல்களையும் போலீசார் அழித்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனையில் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Two people were arrested for brewing counterfeit liquor near Andipatti