பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - சித்தப்பா உள்பட 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அடுத்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்பதால் நன்றாக படிக்க வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனவருத்தம் அடைந்த அந்த சிறுமி, கடந்த ஜனவரி 24-ந் தேதி தனது சித்தி வீட்டுக்கு சென்று சில நாட்கள் தங்கினார். 

அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அவருடைய சித்தப்பா பாலியல் பலாத்காரம் செய்து, இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 14 -ந் தேதி 15 வயது சிறுமி பாட்டி ஊருக்கு திருவிழாவுக்கு சென்றார். 

அங்கு சிறுமியை, ஏற்கனவே திருமணமான 25 வயது வாலிபர் சந்தித்து, அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். மேலும் அந்த சிறுமியை, பக்கத்து வீட்டை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன்னுடன் படிக்கும் தோழிகளிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தோழிகள் உடனே ஆசிரியர் மூலம் 1098 என்ற சைல்டு லைன் எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். 

அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சித்தப்பா மற்றும் 25 வயது வாலிபர் உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய 85 வயது முதியவரை கைது செய்வது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for harassment case in nilagiri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->