சென்னை : புழல் பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.!!
two peoples died for attack poison gas in puzhal chennai
சென்னை : புழல் பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.!!
சென்னையில் உள்ள புழல் காவாங்கரை பகுதியில், குரு சாந்தி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா. இவரது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி கசிந்தால் அதனை சுத்தம் செய்வதற்காக அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரிடம் நிர்மலா தகவல் தெரிவித்தார்.
உடனே கணேசன், பாஸ்கரன் மற்றும் இஸ்மாயில் என்ற இரண்டு தொழிலாளர்களை நேற்று மதியம் நிர்மலா வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அழைத்து வந்தார். அவர்கள் இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் இரண்டு தொழிலாளர்களும் கழிவுநீர் தொட்டிக்குள் மூழ்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார்.
அதன் படி அவர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் மூழ்கிய தொழிலாளர்களை சடலமாக மீட்டனர். உடனே போலீசார் உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் புழல் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் நிர்மலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
two peoples died for attack poison gas in puzhal chennai