அரக்கோணம்.! கஞ்சா கடத்திய இரண்டு பெண்கள் கைது.! - Seithipunal
Seithipunal


அரக்கோணத்தில் கஞ்சா கடத்திய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்பொழுது பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே வந்து நின்றது.

இந்த ரயிலில் சோதனை மேற்கொண்டதில் இரு பெண்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் ஒடிசாவை சேர்ந்த ஜில்லி முகி மற்றும் பூர்ணிமா என்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two women arrested for smuggling cannabis in arakkonam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->