உளுந்தூர்பேட்டை | படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் படுகாயத்துடன் சிகிச்சை.!
ulundurpet school boy accident case
உளுந்தூர்பேட்டை அருகே தமிழக அரசு பேருந்தின் படிக்கெட்டில் தொங்கியபடி பயணம் செய்த அரசு பள்ளி மாணவன், தவறி விழுந்ததில் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த நகர பேருந்து பேருந்தில், சுமார் 150 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து வந்த போது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த அரசு பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் ராஜேஷ், தவறி கீழே விழுந்தார்.
மாணவன் விழுவதை கூட தெரியாமல் அதிவேகமாக சென்ற பேருந்து, சுமார் மீட்டர் தூரம் சென்ற பிறகு நிறுத்தப்பட்டது. கீழே விழுந்த மாணவனுக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மாணவன் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி நேரங்களில் அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படாத காரணத்தினால், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யும் அவல நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
அண்மையில் மேல்மருவத்தூர் அருகே ஒரு அரசு பள்ளி மாணவன் இதே போல் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளான காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த தமிழக அமைச்சர், போதுமான அளவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்தார். தற்போது மீண்டும் உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தின் படிக்கட்டில் இருந்து மாணவன் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ulundurpet school boy accident case