நடிகர் அஜித்குமாருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள் - மத்திய அமைச்சர் எல். முருகன்.!
union minister l murugan wishes to actor ajithkumar for win badma pooshan award
ஒவ்வொரு வருடமும் கலை, அறிவியல், இலக்கியம், வர்த்தகம், மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த உயரிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 19 பேருக்கு பத்மபூஷண் விருதுகள் மற்றும் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என்று மொத்தம் 139 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா மற்றும் தொழில் அதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை தவிர நடிகர் பாலகிருஷ்ணா, முன்னாள் சபாநாயகர் மனோகர் ஜோஷி உள்பட 19 பேர் பத்ம விருதை பெறுகிறார்கள்.
இந்த நிலையில், 'பத்ம பூஷண்' விருது பெற உள்ள நடிகர் அஜித்குமாருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "கலைத் துறையில் சிறந்த பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுகிற உயரிய விருதுகளில் ஒன்றான, 'பத்ம பூஷண்' விருது பெறுகிற, தமிழ்த் திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது தனித்திறன் கொண்ட நடிப்புத் திறமையால், தமிழக குடும்பங்களில் தனக்கென்று தனித்த இடம் பெற்றுள்ள அஜித்குமாருக்கு, இந்த விருது வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அவருக்கு பிடித்த கார் ரேசிலும் அவர் மேலும் பல விருதுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.
English Summary
union minister l murugan wishes to actor ajithkumar for win badma pooshan award