யூபிஐ பண பரிவர்த்தனை : கடந்த ஆண்டை விட பண பரிமாற்றம் 76 சதவீதம் உயர்வு.!
upi transfer seventy six percentage increase
யூபிஐ பரிவர்த்தனையின் படி, கடந்த 2016ம் ஆண்டு முதல் நாடு முழுவதும், கூகுள் பே, பேடிஎம் மற்றும் போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யுபிஐ பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்பட்ட தொகை ரூ.12.8 லட்சம் கோடியாக உள்ளது. இந்த தொகை கடந்த மாதத்தைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாக உள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேசிய பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
யுபிஐ பரிவர்த்தனை வரலாற்றிலே முதல்முறையாக 700 கோடியை தாண்டியது அக்டோபர் மாதத்தில் தான். கடந்த 2022ஆம் ஆண்டு முழுவதும் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7,404 கோடியாகவும், பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.125 லட்சம் கோடியாகவும் உள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில், 2022ஆம் ஆண்டில் பரிவர்த்தனை எண்ணிக்கை 90 சதவீதமும், பரிவர்த்தனை தொகை 76 சதவீதமும் அதிகரித்துள்ளது.
English Summary
upi transfer seventy six percentage increase