மின்சாரத்துறை அதிகாரிகள் அலட்சியம்? பலியான பெண்., சாலை மறியலில் ஊர் மக்கள்.! - Seithipunal
Seithipunal


உசிலம்பட்டி பகுதியில் உள்ள கணவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜயோக்கியம். இவரது மனைவி ஈஸ்வரி(வயது 50). இவர் திங்கட்கிழமை தோட்டத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது அங்கு அறுந்து கிடந்த மின் ஒயரை சரி செய்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர், இவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 

இதற்கு மின்சாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண் ஈஸ்வரிக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே உடல் வாங்கப்படும் என்று, உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் மருத்துவமனையின் முன் முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் கணவாய்பட்டி கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் சமாதானத்திற்கு பிறகு சாலை மறியலில் கைவிட்டு மருத்துவமனைக்கு முற்றுகையிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

usilampatti lady dead in current accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->