மதுரை: போலீசை கொன்ற குற்றவாளியை என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ளிய போலீஸ்!
usilampatti madurai Police murder encounter
மதுரை காவலர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி பொன்வண்ணன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பொன்வண்ணன், போலீசாரின் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காவலர் முத்துக்குமாரை கல்லால் அடித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பொன்வண்ணன், சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவாக இருந்தார். இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
தலைமறைவாக இருந்த பொன்வண்ணன், தேனி மாவட்டம் கம்பம் அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிறப்பு குழு அமைத்து, அவரை பிடிக்க முயன்றபோது தப்பிக்க முயன்றார். இதன் போது சம்பவ இடத்திலேயே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த, அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
usilampatti madurai Police murder encounter