திமுக நினைத்தால் இப்போது கூட முதலமைச்சராக்கலாம்...! திருமாவளவனின் குமுறலுக்கு தலைவர்களின் பதில் கருத்து!
VCK Thirumavalavan CM Post for SC DMK MKStalin BJP Seeman
பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கண்டித்து, விசிக தலைவா் திருமாவளவன் தலைமையில் நேற்று சென்னையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், "உத்தரபிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வந்தது விதிவிலக்கான ஒன்று. எந்த சூழலிலும் எந்தக்காலத்திலும் தலித் ஒருவரால் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது.
இதை விவாதித்தால், பாராளுமன்றத்துடன் இந்த அதிகாரம் ஏன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். மாநில அரசு எந்தச் சூழலிலும் ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்கிற நிலை இங்கே இல்லை, வர முடியாது.
தி மு க மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், திமுக அரசு என்பது நிலையானது இல்லை, மாநில அரசு தான் நிலையானது. சமூக நீதி மீது நம்பிக்கையுள்ளவர்கள் வருவார்கள், போவார்கள்" என்று திருமாவளவன் பேசி இருந்தார்.
இவரின் இந்த கருத்துக்கு கருது தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தலித் முதல்வராக முடியாது என்று தெரிவித்த திருமாவளவன் கருத்தை ஏற்கிறேன். ஆனால் திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற கருத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரமும் திருமாவளவனின் கருத்தை ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளார்.
பக்க மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி இதுகுறித்து தெரிவிக்கையில், "மாயாவதிக்கு முன்னரே, ஆந்திராவின் முதலமைச்சராக தாமோதரன் சஞ்சீவையா, பீகாரின் முதல்வமைச்சராக ராம் சுந்தர் தாஸ், ராஜஸ்தானின் முதலமைச்சராக ஜகன்னாத் பஹாடியா ஆகியோர் பதவி வகித்துள்ளனர் என்று திருமாவளவனுக்கு தெரியாததில் வியப்பில்லை.
பாராளுமன்றத்துடன் இந்த அதிகாரம் இணைக்கப்படவில்லை என்று தெரிந்தே வேண்டுமென்றே பேசியிருக்கிறார் திருமாவளவன். அதிக பெரும்பான்மை உள்ள கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தான் மாநில முதலமைச்சரை தேர்வு செய்கிறார்களேயன்றி, மக்கள் அல்ல.
அதனடிப்படையில் திருமாவளவனின் ஆதங்கம் திமுகவை நோக்கித் தான் இருக்க வேண்டுமேயன்றி, ஒட்டு மொத்த அமைப்பின் மீதல்ல. திமுக நினைத்தால், இப்போது கூட அரசியல் அனுபவம் வாய்ந்த அதே கட்சியை சேர்ந்த திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அ.ராசாவை முதல்வராக்க முடியும் என்பது திருமாவளவனுக்கு தெரியாதா?
அல்லது அவர் வந்து விடக் கூடாது என்று கருதுகிறாரா? ஏன், அ.ராசாவுக்கு தகுதியில்லையா? அவருக்கு தகுதியில்லை என திருமாவளவன் எண்ணுகிறாரா? ஜாதி தடையல்ல, ஜாதி இல்லை என்று சொல்லிக்கொண்டு ஜாதி அரசியலுக்கு சாமரம் வீசுபவர்கள் தான் தடை" என்று நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
English Summary
VCK Thirumavalavan CM Post for SC DMK MKStalin BJP Seeman