#BigBreaking :: கனமழை எதிரொலி..!! வேலூர் மாவட்ட பள்ளிகளை 3 மணியுடன் முடித்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!
Vellore district collected ordered schools close at 3oclock
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் சென்னை, திருவள்ளூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, விருதுநகர், உட்பட 33 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
எனினும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுகாவில் பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம் தாலுகாவில் பள்ளிகளுக்கும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி மற்றும் அரக்கோணம் தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலைகாலை முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் பிற்பகல் 3 மணிக்கு பிறகு விடுமுறை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Vellore district collected ordered schools close at 3oclock