மதுவிலக்கு காவல் துறையினர் கூண்டோடு மாற்றம்..!! வேலூர் மாவட்ட எஸ்.பி அதிரடி உத்தரவு...! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் 23 பேர் பலியான நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தொடர்பான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சும் மலை அடிவாரங்களில் உள்ள கிராமங்களுக்கு லாரி ட்யூப்களின் மூலம் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார் வந்தது. 

அதன் காரணமாக மலைப்பகுதிகளில் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் மூலப் பொருட்கள் மற்றும் ஊரல்களை பறிமுதல் செய்து அழித்து வந்தனர். கள்ளச்சாராய வழக்கில் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதிதாக பதவி ஏற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தற்போது மதுவிலக்கு காவல் துறையினர் 18 காவலர்கள் மற்றும் 2 உதவி ஆய்வாளர்கள் என 20 பேரை கூண்டோடு இடமாற்றம் செய்து மாவட்டத்தில் உள்ள பிற காவல் நிலையங்களில் பணியமத்தியுள்ளார்.

தற்போது புதிதாக 18 காவலர்கள் மற்றும் 4 உதவி ஆய்வாளர்கள் என 22 காவலர்களை மதுவிலக்கு பிரிவு காவலர்களாக பணியமத்தியுள்ளார். கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதாக இவர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore District SP order to transfer prohibition Police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->