பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்! அதிமுகவிற்கு நெருக்கடியை கொடுக்கும் அறிக்கை! - Seithipunal
Seithipunal


பாஜக கூட்டணி வேண்டாம் என்று, அதிமுகவிற்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்த அவரின் அறிக்கையில், "கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. 

அம்மாநிலத்தின் பாஜகவின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் மரண அடி கொடுத்து மக்கள்  வீழ்த்தி உள்ளனர். 

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் வாழும் பெங்களூரு பகுதிகளில் பத்து சட்டமன்றத் தொகுதிகளில் விசிக. சார்பில் பிரசாரத்தை மேற்கொண்டோம். 

பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. 

கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை தூக்கிச் சுமந்து வரும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.க.வுடன் கொண்டுள்ள தங்களது கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்து உள்ளது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viduthalai Chiruthaigal Katchi Thirumavalavan 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->