கடலூர் மாவட்ட ஆட்சியரை சுத்து போட்ட கிராம மக்கள்! சம்பவ இடத்திற்கு விரைந்த அதிமுக எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த கரிவெட்டி, வளையமாதேவி, மும்முடிச்சோழகன், கத்தாழை, சாத்தப்பாடி உள்ளிட்ட ஏழு கிராமங்களில் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனம் விரிவாக்க பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தியது. என்எல்சி நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடமிருந்து ஒரு ஏக்கருக்கு ஆறு லட்ச ரூபாய் என்ற விகிதத்தில் நிலங்களை கையகப்படுத்தியது. என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், நிவாரண உதவிகளையும் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த மீண்டும் நிலங்களை கையகப்படுத்த நேற்று மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியம், வருவாய்த்துறையினர் மற்றும் என்எல்சி அதிகாரிகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் கரிவெட்டி கிராமத்திற்கு சென்று உள்ளனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வரும் தகவலை அறிந்த சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் திரண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் என்எல்சி அதிகாரிகளை ஊருக்குள் விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர். இந்த தகவலை அறிந்த புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழிதேவன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடும், நிவாரணமும் வழங்கப்படாத நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நிலங்களை கையகப்படுத்துவதற்கு பார்வையிட வந்த அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார். 

இதன் காரணமாக நிலங்களை பார்வையிடாமல் கடலூர் மாவட்ட ஆட்சியர், என்எல்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். கிராம மக்களால் மாவட்ட ஆட்சியர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

villagers captured Cuddalore district collector


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->