விழுப்புரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு! கடைகள், நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை இல்லை என்றால்....?
Villupuram Collectors fine announcement shops and institutions don have nameplates Tamil
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், மே 15ஆம் தேதிக்குள் விழுப்புரத்திலுள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டுமென அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் மாவட்ட ஆட்சியர், இந்தப் பெயர்ப்பலகை தமிழில் இல்லை என்றால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்றும் இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்துக் கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளிலுள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவு தற்போது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது.
English Summary
Villupuram Collectors fine announcement shops and institutions don have nameplates Tamil