மேல்மலையனூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி மாதப் பெருவிழா!
Vilupuram The month long festival began with the hoisting of the flag
மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் மாசி மாதப் பெருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், மகா சிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசி மாதப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவை முன்னிட்டு நேற்று காலை கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றது.
இரவு ஊரின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சக்தி கரக ஊர்வலமும் நடைபெற்றது.
இன்று காலை மூலஸ்தானத்தில் உள்ள அம்பாளுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவ அம்மனுக்கு ஆங்கார அங்காளி அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர்.
பின்னர் மயானத்தை நோக்கி சென்று, மயானத்தில் ஆக்ரோஷமாக அங்காளம்மன் எழுந்தருளினாள்.
English Summary
Vilupuram The month long festival began with the hoisting of the flag