இன்று பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா இல்லையா? - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இன்று பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா இல்லையா? - காரணம் என்ன?

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்த விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே உலகப் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தரிசனத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டாலும் பிள்ளையார்பட்டியில் பஞ்சாங்க முறையில் நாளை சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. 19-ம் தேதியான நாளை விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. 

அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் படையல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடைபெற உள்ளது. மேலும், முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி, முக்குருணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுவதாக பிள்ளையார்பட்டி கோயில் தலைமை குரு தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vinayagar chathurti celebration in pillaiyarpatti vinayagar temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->