சென்னையில் இன்று விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம்.. இந்த போக்குவரத்து மாற்றம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்க உள்ள நிலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலை நகர், காசிமேடு மீன் பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறமாகிய கடற்கரை இடங்களில் உள்ள கடலில் கரைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு இடங்களில் உள்ள கடலில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல வரப்படும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை பெருநகரில் ஈவிஆர் சாலை, ஹரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் ரோடு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் ரோடு, நெல்சன் மாணிக்கம் சாலை, காமராஜர் சாலை, ஆர் கே சாலை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் படேல் ரோடு மற்றும் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலைகளுக்கு ஏற்ப தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு போக்குவரத்து துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vinayagar idols melting Chennai traiffic change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->