கொட்டும் மழையில் விநாயகர் சிலையை அகற்றிய அதிகாரிகள்! தொடர் உண்ணாவிரதத்தில் பொதுமக்கள்!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம், திண்டிவனம் மகாத்மா காந்தி நகரில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பொது இடத்தில் விநாயகர் சிலை ஒன்றை கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து வணங்கி வந்தனர். 

இதற்க்கு ஒரு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்த இடத்தில் இருக்கும் சிலையை அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகம் 3 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஆனால் கடந்த 2 நாட்களாக இந்து முன்னணி, பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் மற்றும் தாசில்தார் ஆகியோர் விநாயகர் சிலையை அகற்றக் கூடாது என மனு அளித்துள்ளனர். 

இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இன்று அதிகாலை 3:30 மணியளவில் விநாயகர் சிலையை அகற்ற அதனை சுற்றி கட்டப்பட்டிருந்த சுவரை இடித்து கொட்டும் மழையில் அகற்றினர். 

இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் மீண்டும் அப்பகுதியில் சிலை வைக்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சிலையை அகற்றுவதற்கு முன்பாக பூஜை செய்து பின்னர் சிலை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் எந்தவித அசம்பாவித செயல்களும் நடக்காமல் இருக்க தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vinayagar statue remove tindivanam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->