17 வயது சிறுவன் இயக்கிய குடிநீர் வாகனம்.! பலியாகிய பிஞ்சு குழந்தை.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் அருகே குடிநீர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், மேட்டமலை பகுதியில் முத்துவேல்-இந்திரா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு வயது குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், இன்று காலை முத்துவேல்-இந்திரா தம்பதியின் குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த உள்ளது. குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதை தாய் இந்திராவும் கவனிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில், குழந்தை விளையாடிக்கொண்டு இருப்பதை கவனிக்காத குடிநீர் டெம்போ ஒன்று, பின்னோக்கி இயக்கதில் குழந்தை மீது மோதியது.

இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்தனர்.

அதில், அந்த குடிநீர் வாகனத்தை இயக்கியவர் வீரபாண்டிய புரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுவனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viruthunagar water tank truck accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->