ஒகேனக்கலில் நீர்வரத்து நேற்றை விட 1000 கன அடி குறைந்துள்ளது....!!!
Water flow Okenakkal decreased by 1000 cubic feet compared yesterday
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, ராசிமணல், நாட்றாம் பாளையம்,கேரட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இதனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 4000 கன அடியாக வந்தது.

இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை சற்று குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 3000 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.இதில் 1000 கன அடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் பாதுகாப்பாக குளிக்க இயலும் எனத் தெரிவித்துள்ளனர்.மேலும் சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதில்,சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். அதுமட்டுன்றி, தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Water flow Okenakkal decreased by 1000 cubic feet compared yesterday