ஒகேனக்கல்லில் பாறைகள் தெரியும் அளவிற்கு நீர்வரத்து 300 கன அடியாக சரிந்துள்ளது...!!! இதற்கு காரணம் என்ன?
water level hokenakkal dropped 300 cubic feet rocks visible
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து, கர்நாடகா மாநில காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒகேனக்கலுக்கு நேற்று நீர்வரத்து 700 கனஅடியாக வந்தது. அதன் பின்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 300 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இதில் காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு, நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு சிறு ஓடைகளாகவும் தற்போது காட்சியளிக்கிறது.
அதுமட்டுமின்றி, ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. மேலும் ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இதனால் தமிழக விவசாயம் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
water level hokenakkal dropped 300 cubic feet rocks visible