கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்: அமைச்சர் ரகுபதி காட்டம்!
We will suppress the evil forces trying to incite riots: Minister Raghupathy Kattam
திருப்பரங்குன்றம் விவகாரத்தை பெரிய விவகாரமாக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கின்றனர் என்றும் தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி ஆவேசமாக கூறினார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி கொடுப்பதற்கு போலீசார் சமீபத்தில் தடை விதித்தனர். இதையடுத்து அதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், நேற்று திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்பதை உறுதிப்படுத்தி புனிதம் காக்க கோரி திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் சார்பில் போராட்டம் நடத்தினர். அப்போது 144 தடை உத்தரவை மீறி கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில்சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது என கூறினார் . மேலும் இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு என கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,இதை பெரிய விவகாரமாக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கின்றனர் என்றும் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என ஆவேசமாக கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதைபோல 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இவ்வாறு அவர் கூறினார்.

English Summary
We will suppress the evil forces trying to incite riots: Minister Raghupathy Kattam