குண்டுகட்டாக கைது!!! மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேட்டியளித்தபோது .....!
When Marxist State Secretary Shanmugam gave an interview got arrested
கடலூர் மலையடிகுப்பத்தில் தோல் ஆலைக்கு நிலம் எடுத்ததற்கு எதிராக விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முந்திரி மரங்கள் அழிக்கப்பட்டதை கண்டித்தும் அதே இடத்தில் முந்திரி செடியை நடும் போராட்டத்தை நடத்தினர்.மேலும் இந்த விவசாயிகளின் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் முழுமனதுடன் பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் இருந்த விவசாயிகளை காவலர்கள் கைது செய்தனர்.அப்போது போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டி அளித்து கொண்டிருந்தபோது சண்முகத்தை தள்ளிக்கொண்டு மற்றவர்களை காவலர்கள் கைது செய்தனர்.இந்தக் கடும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.
இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.இதில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகத்தை கைது செய்தது குறித்து அரசியல்வாதிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
English Summary
When Marxist State Secretary Shanmugam gave an interview got arrested