கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கணவர்.... அடித்துக்கொன்று விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த மனைவி...! ஈரோட்டில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கணவரை கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி(52). இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தறி பட்டறையில் வேலை பார்த்து வந்த சுப்ரமணிக்கு, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பத்மா கள்ளத்தொடர்பை கைவிடும்படி சுப்பிரமணியை பலமுறை கண்டித்துள்ளார்.

ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சுப்ரமணி கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்ததால் இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சுப்ரமணி பத்மாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து இவர்களிடையே நேற்று இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாலை திடீரென கண் விழித்த பத்மா, வீட்டில் இருந்த கட்டையால் சுப்பிரமணியை சரமாரியாக அடித்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து பத்மா வீட்டின் கதவை பூட்டிவிட்டு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife beat her husband to murder in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->