ஐயோ பாவம்!!! வனத்துறையினரின் போராட்டம்...! குட்டையில் தத்தளித்த காட்டு யானை!!!
wild elephant floundering in a puddle struggle of the forest department
காட்டு யானைகள் அதிக அளவில் கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் வாழ்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் காட்டு யானைகள்,மான்கள்,மயில்கள், காட்டு எருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகத்தை தணிக்க நீர்நிலைகளைத் தேடி சுற்றித்திரிகின்றன.

அவ்வகையில் அய்யூர் வனப்பகுதியிலிருந்து 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை தாகத்திற்கு தண்ணீர் குடிக்க அருகிலுள்ள மூர்க் கண்கரை கிராமத்திற்குள் திடீரெனப் புகுந்துள்ளது.அப்போது அந்த கிராமத்தின் அருகே தண்ணீர் குடிக்க சென்றபோது யானை எதிர்பாராதவிதமாக விவசாய தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையில் தவறி விழுந்துள்ளது.
அந்த குட்டையிலிருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது. நீண்ட நேரம் போராடியும் யானையால் குட்டையிலிருந்து வெளியேற முடியவில்லை.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு ஜே.சி.பி. வாகனத்தோடு சென்று குட்டையில் தவறி விழுந்த யானையை மீட்டனர்.பிறகு குட்டையிலிருந்து வெளியேறிய யானை அந்த பகுதி வழியாக நடந்து சென்றது.
அப்போது ஜே.சி.பி. வாகனத்தின் மீதும் அப்பகுதி பொதுமக்கள் மீதும் யானை ஆக்ரோசத்துடன் கத்தியது.தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். இதனால் நீண்ட நேரம் அப்பகுதியில் பரபரப்பாகக் காணப்பட்டது.
English Summary
wild elephant floundering in a puddle struggle of the forest department