மதுரை || மதுபோதையில் தகராறு.. ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள, மேலூர் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார் - கோகிலா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே செந்தில்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. 

இதனால், செந்தில் குமார் வேலைக்கு செல்லாமல் தினமும் மதுகுடித்து விட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், வழக்கம்போல் போதையில் வீட்டுக்கு வந்த செந்தில்குமார், மனைவி, மாமியாரை அவதூறாக திட்டியதுடன் அடித்துளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கோகிலா, கணவர் செந்தில்குமாரை கீழே தள்ளி மரக்கட்டை மற்றும் கல்லால் கடுமையாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தில்குமார் உடலை பரிசோதனைக்காக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக மனைவி கோகிலாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for kill husband in madurai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->